நிர்மலா தேவி வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் சோதனை... ஆதாரங்களைத் தேடும் அதிகாரிகள்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியின் வீட்டில் அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி அவர்களை வைத்து தனக்கான காரியங்களை சாதிக்க நினைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி மாணவிகளுடன் உரையாடிய ஆடியோ வெளியானதையடுத்து அவர் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி முழுவதும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து அரசு சார்பில் நிர்மலா தேவி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அவர் காவலில் எடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. 2வது நாளாக நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரின் குரல் மாதிரியை பரிசோதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிர்மலா தேவியின் காரியத்திற்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள் யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலா தேவி வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நிர்மலாதேவி உறவினர் முன்னிலையில் வீடு திறக்கப்பட்டு இந்த சோதனையானது நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. பணப்பரிமாற்றத்திற்கு நிர்மலா தேவி என்ன வழியை பயன்படுத்தினார், அதற்கான வங்கி ஆவணங்கள் இருக்கின்றனவா என்று போலீசார் தேடி வருகின்றனர்.
இதே போன்று நிர்மலா தேவி யார் யாருடன் தொடர்பில் இருந்தார் அது தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் வீட்டில் மறைக்கப்பட்டிருக்கிறதா என்றும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications