For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியானது: ஹைகோர்ட் அதிரடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று சென்னை ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றி, சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றி சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த வழக்கில் இந்திரா பானர்ஜி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது மாநில அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.

Newest First Oldest First
8:06 PM, 18 Jun

ஈரோடு பெருந்துறையில் தமிழக அரசு பேருந்தில் இந்தியில் பெயர் பலகை

பெருந்துறை சிப்காட்டில் இருந்து மார்க்கெட் செல்லும் 17-ம் எண் பேருந்தில் இந்தி பெயர் பலகை

ஞாயிறுதோறும் இந்தி பெயர் பலகையுடன் தமிழக அரசு பேருந்து இயக்கம்

வடமாநில தொழிலாளர்களுக்காக இந்தி பெயர் பலகையுடன் பேருந்து இயக்கப்படுவதாக விளக்கம்

7:51 PM, 18 Jun

திமுகவின் செயல்படாத தலைவர் அதிமுக அரசு செயல்படவில்லை என்கிறார்- முதல்வர்

மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் நடைபெறும் காவிரி நதி நீர் மீட்பு வெற்றி விழாவில் முதல்வர் பேச்சு

அதிமுக அரசின் சட்டப்போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சிறப்பான தீர்ப்பு

7:23 PM, 18 Jun

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால் கர்நாடகத்தில் விவசாய முறையையே மாற்ற வேண்டும்

ஓசூரில் மஜத தலைவர் தேவகௌடா பேச்சு

ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதை விட அதிக நீர் தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது

6:27 PM, 18 Jun

18 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு- நாளை விசாரணை?

3-வது நீதிபதி விமலா நாளை விசாரிக்கக் கூடும் என தகவல்

5:59 PM, 18 Jun

காவிரி மேலாண்மை ஆணையத்தில் சில அம்சங்கள் கர்நாடகாவுக்கு எதிராக உள்ளன

டெல்லியில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி பேட்டி

காவிரி பிரச்சனையில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய திட்டம்- குமாரசாமி

5:52 PM, 18 Jun

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ஹைகோர்ட் உத்தரவு
5:40 PM, 18 Jun

டெல்லியில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி பேட்டி
5:37 PM, 18 Jun

3-வது நீதிபதியை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமித்ததாக தகவல்
5:30 PM, 18 Jun

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் 3-வது நீதிபதி விமலா

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 3-வது நீதிபதி விசாரணை

4:59 PM, 18 Jun

தமிழகத்தின் சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம்

ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு - வானிலை மையம்

தலைநகர் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்- வானிலை மையம்

சென்னையில் மாலை அல்லது இரவு வேளைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்

3:52 PM, 18 Jun

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் நீக்கம்- பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு

மொழித் தேர்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியதாக தகவல்

3:36 PM, 18 Jun

துப்பாக்கிச் சூடு மனிதாபிமானமற்ற செயல் என மேதா பட்கர் விமர்சனம்

சமூக ஆர்வலர் மேதா பட்கர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்தார்

3:25 PM, 18 Jun

காவிரி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் உறுப்பினர்கள் பெயர் பரிந்துரைக்கப்படும் - குமாரசாமி

காவிரி ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன - குமாரசாமி

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனைக்கு பின் பேட்டி

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா மதிக்கும் - குமாரசாமி

காவிரி ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது - குமாரசாமி

3:20 PM, 18 Jun

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை - ஹைகோர்ட் தலைமை நீதிபதி
2:32 PM, 18 Jun

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடக அரசு மீண்டும் முட்டுக்கட்டை

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை- குமாரசாமி

நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடு

1:35 PM, 18 Jun

ஸ்டாலினால்தான் தமிழகத்துக்கு ஆபத்து- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சியால் தமிழகத்துக்கு ஆபத்து என ஸ்டாலின் கூறியிருந்தார்

அதிமுக ஆட்சியில் யாருக்கும் ஆபத்து இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

எல்லோருக்கும் பரிபூரண சுதந்திரம் இருக்கிறது- அமைச்சர் ஜெயக்குமார்

வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதை அரசு அனுமதிக்காது

மன்சூர் அலிகான் பேசியது வன்முறையான பேச்சு- அமைச்சர் ஜெயக்குமார்

1:23 PM, 18 Jun

திண்டுக்கல் காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

திண்டுக்கல் தெற்கு காவல் நிலையம் அருகே குமரேசன் என்பவர் வெட்டி கொலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்

12:39 PM, 18 Jun

சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிர்ப்பு- 6 பேர் கைது

தங்களது நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் கைது

விவசாயி ரவிச்சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

12:37 PM, 18 Jun

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கை வாபஸ் பெற்றால் சிறப்பாக இருக்கும்: தங்க தமிழ்ச்செல்வன்

தகுதி நீக்க வழக்கில் பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

நாட்டில் ஜனநாயகம் 100% இல்லை- தங்க தமிழ்ச்செல்வன்

ஆளுநரிடம் மனு தந்ததால் எம்எல்ஏ பதவியை பறித்தது தவறு- தங்க தமிழ்ச்செல்வன்

12:23 PM, 18 Jun

நெல்லை கோர்ட்டில் ஆஜராக எஸ்வி சேகருக்கு உத்தரவு

ஜூலை 12-ல் எஸ்வி சேகர் ஆஜராக உத்தரவு

12:06 PM, 18 Jun

காவிரி ஆணைய உறுப்பினர்களை கர்நாடகா விரைவில் அறிவிக்க வேண்டும்

காவேரி ஆணைய கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும்

இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

காவிரியில் நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்

போதிய நீர் வந்தவுடன் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்

12:02 PM, 18 Jun

தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி

பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

11:59 AM, 18 Jun

'எல் நினோ' உருவாகியுள்ளதாக அமெரிக்க வானிலை ஏஜென்சி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் உருவாகிறது எல் நினோ

இந்திய வானிலையில், பருவமழையில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு

11:56 AM, 18 Jun

மயிலாடுதுறையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி
11:39 AM, 18 Jun

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தலாம்: ஹைகோர்ட்

சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என ஹைகோர்ட் தலைமை நீதிபதி கருத்து

சிறப்பு விசாரணை குழு அமைக்க வழக்கறிஞர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த வழக்கில் கருத்து

English summary
The Chennai High Court said that the CBI can investigate the police shot incident in Thoothukudi. The High Court Chief Justice Indira Banerjee said that the CBI can be investigate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X