சசிகலா கணவர் நடராஜன் மீதான சொகுசு கார் வழக்கு.. பிப். 27ல் இறுதி விசாரணை.. ஐகோர்ட் உத்தரவு
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வரும் 27ம் தேதி நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டு வரி ஏய்ப்பு செய்த வழக்கில் இறுதி விசாரணை வரும் 27ம் தேதி நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன், லண்டனில் இருந்து 'லெக் சஸ்' என்ற சொகுசு காரை 1994ம் ஆண்டில் இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக் கூறி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 2 வருடம் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். என்று எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் 4 பேரின் தண்டனைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், லண்டன் சொகுசு கார் தொடர்பான வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக முடியாமல் தொடர்ந்து கொண்டே இருப்பதால், வழக்கின் இறுதி விசாரணை வரும் 27ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த வழக்கு, 27ஆம் தேதியன்று நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.அன்று ம. நடராஜனுக்கான இறுதி தண்டனை என்ன என்பது தெரிய வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications