தாது மணல் முறைகேடு: தமிழ்நாட்டில் 12 இடங்களில் சிபிஐ சோதனை: 7 வழக்குகள் பதிவு- தொடரும் விசாரணை!
சென்னை: தமிழ்நாட்டில் தாது மணல் முறைகேடுகள் தொடர்பாக 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 2000-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கடற்கரையோர தாது மணல் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்தல், ஏற்றுமதி செய்தல் ஆகியவை தொடர்பாக 6 நிறுவனங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 21 நபர்கள் மீது மத்திய புலனாய்வுத் அமைப்பான சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக 17.02.2025 அன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட சுரங்க நிறுவனங்களும் இயக்குநர்களும், கனிமங்கள், தாதுப் பொருட்கள் சட்டம் -1957, அணுசக்தி சட்டம் - 1962 ஆகியவற்றின் விதிகளை மீறியதாகவும், சில அரசு ஊழியர்கள் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுரங்க நிறுவனங்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாகவும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த சுரங்க நிறுவனங்களால் கனிம இழப்பு, உரிமைத் தொகை இழப்பு ஆகியவற்றால் அரசுக்கு ₹ 5832.29 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தாது மணல் எடுத்தல், ஏற்றுமதி ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களில் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
-
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
"என்னை விட்டுருங்க.. "விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம் -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி












Click it and Unblock the Notifications