ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ-க்கு ஒன்றும் கிடைக்காது... காங்கிரஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்தார்.

2007-2008-ஆம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐநாக்ஸ் மீடியாவுக்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது.

CBI will get nothing in P.Chidambaram raids, says Ramasamy MLA

இந்த ரெய்டு குறித்து ராமசாமி தெரிவிக்கையில், ப.சிதம்பரத்தின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு பாஜகதான் காரணம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது வீட்டில் ரெய்டு நடத்துகிறது. எந்த தவறும் செய்யாத மனிதர் ப.சிதம்பரம்.

சிபிஐ ரெய்டு ரெய்டு என்று கூறிக் கொள்கிறார்களே தவிர அவர்களின் வீட்டில் என்ன கிடைத்தது என்பதை யாரும் தெரிவிப்பதில்லை. என்னதான் தேடினாலும் அவரது வீட்டில் எந்த ஆவணங்களும் கிடைக்கப் போவது இல்லை என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress MLA Ramasamy says CBI will not get any documents in P.Chidambaram's house.
Please Wait while comments are loading...