எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து ஜாமர் கருவிகள் அகற்றம்
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்ட ரிசார்ட்டில் இருந்து ஜாமர் கருவி வாகனத்தை உடனடியாக அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் இருந்து ஜாமர் வாகனம் வெளியேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் எஸ்.பி ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல்வராகியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியினர் அதிமுக எம்எல்ஏக்களை சொகுசுப் பேருந்தில் வைத்து கடத்திச் சென்றனர். மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் 2 நாட்களாக அடைத்து வைத்துள்ளனர்.

எம்எல்ஏக்கள் மற்றவர்களை சந்திக்க மன்னார்குடி கும்பல் தடை விதித்துள்ளது. எம்எல்ஏக்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து அந்த கும்பல் அடியாட்களை இறக்கியுள்ளது.
எம்எல்ஏக்களை யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதற்காக, அப்பகுதியில் செல்போன் சிக்னல் ஜாமர் கருவி வாகனம் நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டனர். எந்த வித தகவல் தொடர்பும் இன்றி எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டனர். செல்போன், வைபை,இணையதள தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டதாகவும், கூவத்தூர் ரிசார்ட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து காஞ்சிபுரம் எஸ்.பி உடனடியாக ரிசார்ட்க்கு சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து உடனடியாக ரிசார்ட்டில் இருந்து ஜாமர் வாகனம் அகற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் ஆய்வு செய்ய வரலால் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications