நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?
கடந்த சில நாட்களாக சிபிஐ புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும், அவரது குடும்பத்தையும் எப்படியும் சிக்கலில் மாட்டி விட வேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.
மூன்று நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதில் நடைபெற்றதாகச் சொல்லப் படும் முறைகேடுகள் சம்மந்தமாக ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்த போதே பலரது புருவங்கள் உயர்ந்தன.

இந்த எஃப்ஐஆரி ல் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெஹலோட், இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தாலும், கார்த்தியின் பெயர் இடம் பெற்றிருப்பததுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கார்த்திக்கு சொந்தமானதாக கருதப்படும் ஒரு நிறுவனம்தான் இந்த ஆம்புலனஸ்களின் வடிவமைப்பில் கடைசி நேரத்தில் சில மாறுதல்களைச் செய்யச் சொன்னதாகவும் இதன் காரணமாகவே அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டுகிறது.
ஆனால் இந்தக் குற்றச் சாட்டை கார்த்தி சிதம்பரம் மறுக்கிறார். குறிப்பட்ட அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுதான் அவரது அதிகாரபூர்வ நிலைப்பாடாக உள்ளது.
இந்தப் பிரச்சினை வெளிவந்த உடனேயே மற்றோர் விவகாரமும் இன்று காலையில் வந்த எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தியாகிருக்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழியங்கும் அமலாக்கப் பிரிவு (ஈடி) இந்திய ரிசர்வ் வங்கிக்கு எழுதயிருக்கும் ஒரு கடிதத்தில் கார்த்தியின் நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் செய்து வந்த வர்த்தகத்தில் மேற்கொள்ளப் பட்ட அந்நிய செலாவணி பரிவர்த்தனை விவரங்களை கேட்டிருக்கிறது. இதேபோல பங்குச் சந்தைகளில் கார்த்தி தொடர்பான நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றியும் விவரங்களை கேட்டிருக்கிறது ஈடி.
கார்த்தி சிதம்பரத்தை வளைக்கவே இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனகளை ஈடி அமைப்பு குறிவைப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது. 2006 ல் சி சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் 26 லட்சம் ரூபாயை அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் என்ற நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்துடன் கார்த்திக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் ஈடி கருதுகிறது. இது எப்படியென்றால், 2011 ல் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட், பங்குச் சந்தையில் 1,219 இருந்த ஒரு ஷேரை வெறும் 15 ரூபாய்க்கு ஆஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்கஸ் என்ற நிறுவனத்திற்கு விற்றது.
ஆஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்சில் 95 சதவிகித பங்குகளை கார்த்தி சிதம்பரம் வைத்திருந்த போதுதான் அந் நிறுவனம் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்தில் 66 சதவிகித பங்குகளை வாங்கியிருப்பதாக கருதுகிறது ஈடி. இந்த 26 லட்சத்தை ஏர்செல் டெலிவிஸ்டாஸ் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்துக்கு அவர்கள் கொடுத்த கன்சல்டன்சி சர்வீசஸ்களுக்காக அளித்த கட்டணமாகக் கூறுகிறது. ஆனால் என்ன மாதிரியான கன்சல்டன்சி சேவை கொடுக்கப்பட்டதென்று ஈடி விசாரணையில் கேட்கப் பட்டபோது அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்று ஈடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே போல வாசன் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100 கோடி ஷேர்கள் வெறும் 1.5 கோடிக்கு அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதும் ஈடி பூதக் கண்ணாடியில் மாட்டிக் கொண்டுள்ளது. இதே போல கார்த்தி சிதம்பரத்தின் மனைவிக்கு சொந்தமான க்ரியா எஃப்எம்சிஜி டிஸ்டிரிபியூஷன் நிறுவனத்துக்கும், அப்போலோ குரூப்புக்கும் நடைபெற்ற ஒரு பரிவர்த்தனையும் தற்போது சிபிஐ வளையத்தில் உள்ளது. இந்த விசாரணைகள் அனைத்தின் நோக்கமும் எப்படியாவது ஏர்செல் மாக்சிஸ் விவகாரத்தில் ப சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை உள்ளே இழுப்பதுதான் என்றே கூறப்படுகிறது.
திடீரென்று ப சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐயின் நடவடிக்கைகள் நன்கு திட்டமிடப்பட்ட, ஆழமானதோர் அரசியல் தாக்குதலின் ஒரங்கமாகவே பார்க்கப்படுகிறது. இது ஏதோ ஒரே நாளில் நடந்ததாக தெரியவில்லை.
‘ஆகஸ்ட் 7 ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்தித்த பின் நடந்தவற்றை நினைவு கூறுங்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மீது சொத்து குவிப்பு வழக்கு, திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2ஜி வழக்கு சம்மந்தமாக சிபிஐ சம்மன், தற்போது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைகள்... இவ்வாறு சொல்வதால் அ ராசாவும், சண்முகநாதனும், கார்த்தியும் சொக்கத் தங்கங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ஆகஸ்ட் 7 சந்திப்புக்கும் தற்போது நடப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று நாம் கருதுவது அரசியல் பேதமை ஆகாதா?' என்கிறார் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெருக்கமான ஒரு தலைவர்.
நன்கு குறிவைத்து ப சிதம்பரத்தை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் உள்ளே இழுப்பதற்கான வேலையை நாலா பக்கத்திலிருந்தும் சிபிஐ தொடங்கி விட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
1996 ம் ஆண்டில் அப்போதய நிதியமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோதுதான் சசிகலா மீது அந்நிய செலாவணி மோசடி வழக்குள் அடுத்தடுத்து போடப்பட்டன. 1996 ஜூன் மாதம் ஈடி யால் கைது செய்யப் பட்ட சசிகலா பத்து மாதங்கள் சிறையில் இருந்து 1997 ஏப்ரலில்தான் விடுதலையானார். சசசிகலா வுக்கு எதிரான கிட்டத்தட்ட ஆறுக்கும் மேற்பட்ட அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் இன்னமும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
இது கள யதார்த்தம்.
இன்று காலம் மாறியிருக்கிறது... காட்சிகளும் மாறியிருக்கின்றன. அனேகமாக இது அன்று பாதிக்கப்பட்டவர்கள், அதற்குக் காரணமானவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தரப் போட்டிருக்கும் திட்டமாகவும் இருக்கலாம்!
-ஆர் மணி.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications