தாது மணல் இருப்பு குறித்து கணக்கெடுக்க சிறப்பு குழு அமைப்பு!
தாது மணல் இருப்பு குறித்து கணக்கெடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை: மத்திய, மாநில அரசுகள் இணைந்து தாது மணல் இருப்பு குறித்து சிறப்பு குழு அமைத்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள குடோன்களில், தாது மணல் பிரித்தெடுக்கும் ஆலைகள் ஆகியவற்றில் எவ்வளவு தாது மணல் இருப்பு உள்ளது என்பதை ஆய்வு செய்ய இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் இருப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்த ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு தொழில் முதலி்ட்டு கழக தலைவர் சத்யா பிரதா சாகு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை வந்த இந்த குழுவினர் இது தொடர்பாக நெல்லை கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் குழுவின் தலைவர் சத்யா பிரதா செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசியதாவது, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள குடோன்களில், தாது மணல் பிரித்தெடுக்கும் ஆலைகள் ஆகியவற்றில் எவ்வளவு தாது மணல் இருப்பு உள்ளது என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அந்தந்த மாவட்ட கலெக்டருடன் ஆய்வு நடத்தி வருகிறோம். இரண்டாவது கட்டமாக மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து விஞ்ஞான பூர்வமாக கார்னெட், இல்மனைட் போன்ற ஓவ்வொரு தனிமமும் எவ்வளவு இருப்பு உள்ளது என்று சரிபார்க்கப்படும்.
2013ல் தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்ட பிறகு எவ்வளவு தாது மணல் துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் மத்திய சுங்க துறை சார்பில் ஏற்கனவே ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே 2013ல் மூன்று மாவட்டங்களிலும் தடையை மீறி தாது மணல் அள்ளியதற்கான ஆவணங்கள் உள்ளன.
எங்களை பொறுத்தவரை தாது மணல் இருப்பை மட்டுமே கணக்கெடுக்க உள்ளோம். இவ்வாறு கணக்கெடுப்பு குழுத் தலைவர் சத்ய பிரதா கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications