For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாலாப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 99 கோடியில் தடுப்பணை

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் லாலாப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் ரூ. 99 கோடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசின் பொதுப் பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் தெ.கலைச்செல்வன் கூறியுள்ளார்.

லாலாப்பேட்டை பகுதி காவிரி ஆற்றிலிருந்து சிந்தலவாடி, வையம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஊராட்சி குடிநீர் தேவைக்கான போர்வெல் குழாய்கள், மற்றும் மிகப்பெரிய திட்டமான மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி வரை செல்லும் கூட்டுக் குடிநீர் திட்டம் போர்வெல் குழாய்கள் இங்கு தான் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் திட்டங்களுக்காக அதிகளவு தண்ணீர் உறிஞ்சப்படுவதால் இதர பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து விட்டது விவிசாயிகளுக்கு தண்ணீர் பாதிப்பு ஏற்பட்டது, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் உறிஞ்சும் கிணறு உள்ளடக்கிய பகுதியில் தண்ணீர் தேக்கி வலிந்து செல்லும் (செக் டெம்) தடுப்பணை அமைக்க வேண்டுமென்று லாலாப்பேட்டை சகானா அறக்கட்டளை தலைவர் நாகராஜன் முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தொடர் மனுக்கள் அனுப்ப கோரிக்கை வைத்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளடக்கிய பகுதியில் ரூபாய் 99 கோடியில் (செக் டேம்) தடுப்பணை கட்டுவதற்கு திட்டங்கள் தயார் செய்து அரசிடம் நிதி ஆதாரம் கோரப்பட்டுள்ளது. நிதி வந்ததும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் ஆதாரம் மற்றும் ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கலைச்செல்வன் கூறியுள்ளார்.

English summary
A Check dam will be built across Cauvery near Lalapet to be built at a cost of Rss 99 crore, said PWD EE Kalaiselvan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X