பாலில் ரசாயனம் கலக்கவில்லை.. அமைச்சரின் புகாருக்கு நெஸ்லே நிறுவனம் மறுப்பு!
பால் பவுடரில் ரசாயனம் கலக்கவில்லை என நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: பால்பவுடரில் ரசாயனம் ஏதும் கலக்கவில்லை என நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் புகாரையும் நெஸ்லே நிறுவனம் மறுத்துள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதாக அண்மையில் வளைத்து வளைத்து குற்றம்சாட்டினார். ஆனால் பாலில் எந்த கலப்படமும் செய்யப்படவில்லை என ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ் நிறுவனங்களின் பால் பவுடரில் காஸ்டிக் சோடா, பிளிச்சிங் பவுடர் கலந்திருப்பதாக சோதனை முடிவு வந்துள்ளது என்றார்.

பாலில் காஸ்டிக்சோடா
பத்திரிகை குழுமம் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில், சோதனை செய்த போது, இந்த முடிவு வந்துள்ளது என்றும் அவர் கூறினார். அமிலம் அதிகமாகி, கெட்டுப்போன பாலில், அமிலத் தன்மையை குறைப்பதற்காக, காஸ்டிக் சோடா சேர்க்கின்றனர் என அவர் குற்றம்சாட்டினார்.

பால்பவுடராக்கி விற்பனை
அமிலத் தன்மை குறைந்ததும், பாலாக்காமல் பால் பவுடராக்குகின்றனர். அதை மக்கள் வாங்கி, சுடுதண்ணீரில் கலந்து, குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதை குடித்தால், வயிற்றுப்போக்கு, காலரா ஏற்படும்.
சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. மக்கள் விழிப்புணர்வுக்காக, இதை தெரியப்படுத்துகிறேன் என்றார்.

நடவடிக்கை எடுக்கப்படும்
பால் பவுடரில், கலப்படம் இருப்பது தெரிய வந்துள்ளது. இரண்டு பால் தொடர்பான ஆய்வறிக்கை வந்துள்ளது. மேலும், சில கம்பெனிகளின் பால் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. முதல்வருடன் கலந்தாலோசித்து, பால் பவுடர் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பால் பாக்கெட்டுகள்..
பெயரை குறிப்பிட்டு குற்றம்சாட்டியதோடு, குறிப்பிட்ட பால் பவுடர் பாக்கெட்டுகளையும் பிரஸ் மீட்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடுத்துக்காட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெஸ்லே நிறுவனம் மறுப்பு
இந்நிலையில் அமைச்சரின் புகாருக்கு நெஸ்லே நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாலில் ரசாயனம் கலக்கப்படவில்லை என்று கூறிய அந்நிறுவனம், ஆய்வு தொடர்பான எந்த அறிக்கையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என கூறியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications