சென்னை மழை: உங்கள் வளர்ப்பு பிராணிகளைப் பாதுகாத்திட இங்கே வாருங்கள் - கனிகா
சென்னை: "மழையால் தவிக்கும் உங்கள் செல்ல பிராணிகளைப் பாதுகாத்திட இங்கே கொண்டு வாருங்கள்" என்று நடிகை கனிகா தெரிவித்திருக்கிறார்.
மழை, வெள்ளத்தால் மக்கள் படும் அவஸ்தைகளை விட வாயில்லாப் பிராணிகள் படும் துன்பங்கள் தான் அதிகம். பேசத் தெரிந்த மனிதர்களே இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கையில் வாயில்லாத அந்தப் பிராணிகள் படும்பாடு எழுத்தில் அடங்காது.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிகள் செய்து வரும் நடிகை கனிகா பின்வரும் தகவல் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
"டிடிகே ரோட்டில் உள்ள சங்கரா ஹால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லப் பிராணிகளுக்க திறந்திருக்கிறது. உங்களிடம் செல்லப் பிராணிகள் இருந்து அவற்றிற்கு மருத்துவ உதவியும், தங்குமிடமும் தேவைப்பட்டால் நீங்கள் இங்கே வரலாம்.
உங்களுக்கு வரும் வழி தெரியவில்லை அல்லது ஏதேனும் உதவி தேவையெனில் நீங்கள் இந்த எண்ணில்(04424990870) எங்களைத் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் தொண்டு செய்வோர் மற்றும் மருத்துவ உதவியுடன் இங்கே காத்திருக்கிறோம்"என்று கனிகா கூறியிருக்கிறார்.
உங்கள் பக்கத்தில் யாரேனும் செல்லப் பிராணிகளை வைத்திருந்தால் அவர்களுக்கு நீங்கள் இந்தத் தகவலை தெரிவிக்கலாமே!
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications