இங்க பாருங்க.. அரளி கொட்டையை சாப்பிட போறேன்.. பதட்டத்தை ஏற்படுத்திய ரவுடி பிரபு.. வைரல் வீடியோ
Recommended Video
செங்கல்பட்டு: "இங்க பாருங்க.. அரளி கொட்டை சாப்பிட போறேன்.. சாக போறேன்.. என் சாவுக்கு காரணம் அந்த 4 பேர்தான்" என்று ரவுடி ஒருவர் போலீஸ்காரர்கள் மீது குற்றஞ்சாட்டி, தற்கொலை முயற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு.. இவரது தம்பி பிரேம்குமார்.. இருவரும் பயங்கரமான ரவுடிகள்.
நிறைய கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கடத்தல், மணல்கடத்தல் என ஏகப்பட்ட கேஸ்கள் இருக்கின்றன. இதில் பிரவு கொஞ்சம் அதிகம்.. இவர் மீது ஹவாலா கேஸ்கூட உள்ளது. இருவரும் அடிக்கடி ஜெயிலுக்கு போய் வெளியே வருவது சர்வசாதாரணமான ஒன்று.

மணல் கடத்தல்
இவர்கள் மீது பாலாற்றில் மணல் திருடுவதாக புகார் வந்தது.. அதனால் போலீசார் இவர்களை விசாரணைக்கு பைக்கில் அழைத்து சென்றனர். ஆனால், போலீஸ்காரரை தள்ளிவிட்டுவிட்டு 2 பேரும் தப்பி உள்ளனர். இதில் போலீஸ்காரர் குமாருக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளது.

வீடியோ
இந்நிலையில், திடீரென பிரபு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். போலீசார் தன்னை மிரட்டியதாக கூறி அரளி விதையை சாப்பிடுவது போல் அந்த வீடியோவை எடுத்துள்ளார். அதில், "என் மேல நிறைய கேஸ் இருக்கு.. நான் கரெக்ட்டா கோர்ட்டிலும் ஆஜராகிட்டுதான் இருக்கேன்.. எனக்கும் தம்பிக்கும் பிரச்னை.. அதனால அடிச்சு துரத்திட்டேன்.

எஸ்ஐ குமார்
என் பெரிய பொண்ணு, வம்புதும்புக்கு போகாதீங்கப்பான்னு சொன்னா.. அதனால நான் எந்த தப்புக்கும் போறதில்லை. ஆனா, ஸ்டேஷன்கு போய் 110 போட்டுக்கிட்டு வந்தேன். திடீர்னு வீட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, குமார் எஸ்ஐ கூப்பிடறார், வா ஸ்டேஷனுக்கு போலாம்னு கூப்பிட்டாங்க.

மிரட்டுறாங்க
நான் வரமுடியாதுன்னு சொல்லிட்டேன். இப்படி கேட்டதுமே என் பொண்டாட்டி சாக போறேன்னு சொன்னா. இப்ப திடீர்னு வந்து கூப்பிட்டா நான் என்ன செய்வேன்.. என்னை மண் ஓட்ட சொல்லி மிரட்டினாங்க. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. இல்லைன்னா காசு கொடுன்னு கேட்டு மிரட்டுறாங்க.

அரளி கொட்டை
என்னால முடியல.. இந்த அரளி விதையை சாப்பிட்டுவிட்டு சாகப்போகிறேன். என் சாவுக்குக் காரணம் அந்த 4 போலீஸ்காரங்கதான்.. இங்க பாருங்க சாப்பிடறேன்" என்று சொல்லிக் கொண்டே அரளி கொட்டையை வாயில் வைத்து கடித்துவிட்டார். போலீஸே மணல் கடத்தல் செய்யச் சொல்வது போல பிரவு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு
இந்த விவகாரத்தில் உண்மை காரணம் என்னவென்று தெரியவில்லை.. அதேபோல, வாயில் அரளி கொட்டையை வைத்து கடித்தவர், சாப்பிட்டாரா, இல்லையா என்றும் தெரியவில்லை. இது சம்பந்தமாக போலீசார்தான் உண்மைதன்மையை வெளிக் கொணர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அரளி கொட்டையை வாயில் வைத்து பிரபு கடிக்கும் இந்த தற்கொலைமுயற்சி வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications