சென்னையில் வேகமாகப் பரவுகிறது டெங்கு... சிறுமி பலி - 35 பேர் பாதிப்பு
சென்னை: தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில், 20 நாட்களில், 35 பேருக்கு, டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் காயார் கிராமத்தை சேர்ந்தவர் பிரான்ஸ். மளிகை கடை நடத்தும் இவரது 3 வயது மகள் ஜூலியட். காய்ச்சல் காரணமாக கடந்த 16-ம் தேதி ஜூலியட்டை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனையில் ஜூலியட்டுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 17-ம் தேதி மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூலியட்டை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழுவினர் குழந்தையின் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குழந்தை உயிரிழந்தது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "திருப்போரூர் பகுதியில் மருத்துவ முகாம் நடத்திய போது, இந்த குழந்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. குழந்தையின் இறப்பு குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அலுவலரிடம் கேட்டிருக்கிறோம்" என்றார்.

2500 பேர் பாதிப்பு
தமிழகம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவிற்கு இதுவரை 2,500 பேர் வரை, பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இதுவரை, 90 பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.ஜ

35 பேருக்கு டெங்கு
ஜனவரி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, 55 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டது. இந்த மாதம், 1ம் தேதி முதல், 20ம் தேதி வரை, 35 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறுகிய நாட்களில், டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருவதால், மாநகராட்சி சுகாதார துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

அமைச்சர் ஆய்வு
கடந்த ஆண்டை விட, சென்னையில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் மறைக்காமல் தகவல்களை அளிக்க வேண்டும் என, சுகாதார துறை அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். டெங்கு விழிப்புணர்வு முகாம்களும், நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், டெங்கு கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மறைக்கும் மருத்துவமனைகள்
சில மருத்துவமனைகள் தகவல்களை மறைப்பதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு, மாநகராட்சி, 'நோட்டீஸ்' வழங்கி இருப்பதாகவும், பொது சுகாதார சட்டப்படி இந்த மருத்துவமனைகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், மாநகராட்சியின் சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், மாநகராட்சியின் சில ஊழியர்களும், தங்கள் பகுதியில் ஏற்பட்டிருந்த டெங்கு பாதிப்பு குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்து உள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications