சென்னை புத்தகக் கண்காட்சி: புத்தக பிரியர்களுக்காக 1 லட்சம் தலைப்புகளில் 1 கோடி புத்தகங்கள்
சென்னை: 39ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை தீவுத்திடலில் இன்று முதல் தொடங்கியுள்ளது. 13ம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 450 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்திவருகிறது. ஆண்டுதோறும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும்.

கோடிக்கணக்கான புத்தகங்களில் தங்கள் அறிவுப்பசிக்கு உகந்த புத்தகங்களை ஒரே இடத்தில் தேடி வாங்கிச்செல்வது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும். தமிழகம் முழுவதிலிருந்தும் வாசகர்கள் இந்த புத்தக திருவிழாவிற்கு திரண்டு வந்து புத்தகங்களை வாங்கி செல்வர். இந்த ஆண்டு புத்தக பிரியர்களுக்காக சுமார் 1 லட்சம் தலைப்புகளில் 1 கோடி புத்தகங்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாத வெள்ளம்
ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதத்தின் முதல்வாரத்தில் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி இந்த ஆண்டு சென்னை பெருவெள்ளத்தால் தள்ளிப்போனது.
39வது புத்தக கண்காட்சி
இந்த ஆண்து 39வது ஆண்டாக சென்னை புத்தக கண்காட்சி தீவுத்திடலில் இன்று தொடங்கியுள்ளது.
கண்காட்சியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தொடங்கி வைத்தார். 39-வது புத்தகக் காட்சியை ஒட்டி சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. இதை சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வெளியிடுகிறார்.
புத்தக திருவிழா
இன்று துவங்கும் புத்தக கண்காட்சி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
1 கோடி புத்தகங்கள்
இந்தக் கண்காட்சியில் சுமார் 1 லட்சம் தலைப்புகளில் 1 கோடி புத்தகங்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாசகர்களைக் கவர கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு போட்டிகள்
மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவற்றை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
குழந்தைகளுக்கு பயிற்சி
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.10. குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கட்டுரை, ஓவியம், குறும்படப் போட்டிகள் நடத்தப்படும். ஓவியப்பயிற்சி பட்டறையில் குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி அளிக்கப்படும். தினசரி குறும்படங்களும் வெளியிடப்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications