For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில்.... அம்மா வாரச் சந்தையை எப்ப சார் திறப்பீங்க....?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, மக்களுக்கு மலிவு விலையில் பொருட்களை விற்கும் நோக்கத்தில் சென்னையில் 15 இடங்களில் ‘அம்மா வாரச்சந்தை' அமைக்கும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்த விலையில் தரமான பொருட்கள் மக்களைச் சென்றடையும் நோக்கத்தில் ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா குடிதண்ணீர் போன்றவற்றை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அவை மக்களிடம் அமோக ஆதரவையும் பெற்றுள்ளன.

Chennai corporation begins work on Amma market

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்களை விற்பதற்காக அம்மா வாரச்சந்தை தொடங்கப் பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பாதி விலையில்...

அம்மா சந்தையில் பொருட்களை பாதி விலையில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் உள்பட 1,256 விதமான பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

15 இடங்களில்...

அம்மா சந்தையை, சென்னையில் 15 முக்கிய இடங்களில் அமைக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதல்கட்டமாக 6 இடங்களில் அம்மா சந்தை அமைக்கப் பட உள்ளது.

முதல்கட்டமாக 6 இடங்கள்...

இதற்காக அருகம்பாக்கம், சாலி கிராமம், வளசரவாக்கம், ஆற்காடு சாலை, டைட்டில் பார்க் அருகில், நந்தம்பாக்கம், மிண்ட் ஆகிய பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

200 கடைகள்...

இந்த மார்க்கெட் 100 சதுர அடி பரப்பளவில் 200 கடைகளை கொண்டதாக அமைய இருக்கிறது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொது மக்களின் தேவைக்குரிய பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.

விற்பனை எதிர்பார்ப்பு...

சென்னை மாநகராட்சி பகுதியில் இந்த சந்தை மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரத்து 950 கோடி அளவுக்கு விற்பனை நடைபெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் துணி, அழகு சாதன பொருட்கள், சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் மட்டும் ஆண்டுகளுக்கு ரூ. 3,600 கோடி வரை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

41 துறைகள் மூலம்...

இந்த சந்தைக்கென சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் 41 துறைகள் மூலம் மாநிலம் முழுவதும் இருந்து பொருட்களை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

விவசாயப் பொருட்கள்...

16 ஆயிரத்து 564 கிராமங்களில் இருந்து அங்கீகரிக்கப் பட்ட விவசாயிகளிடமிருந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் இந்தச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிகவரி சலுகை...

அம்மா சந்தைக்கு பொருட்களை கொண்டு வரும் விவசாயிகளுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம். இந்த வாரச்சந்தையில் விற்பனை செய்யப்பபடும் பொருட்களுக்கு வணிகவரி சலுகையும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்மா வாரச்சந்தையும்...

ஏற்கனவே அம்மா குடிநீர், அம்மா உணவகம் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரால் பல திட்டங்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த வரிசையில் அம்மா வாரச் சந்தையும் இணையவுள்ளது.

English summary
The Chennai corporation has started works to set up Amma market, which it has announced some months back
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X