கொசு ஒழிக்கும் நொச்சி செடி - இலவசமாக வழங்குகிறது சென்னை மாநகராட்சி!
சென்னை: வீடுகளிலும் தெருக்களிலும் நொச்சி செடி வளர்க்க விரும்புவோருக்கு செடிகளை இலவசமாக வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
கொசுக்களை ஒழிப்பதற்காக 2013-ம் ஆண்டு முதல் நொச்சி செடிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் நொச்சி செடிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பொதுநலச் சங்கங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் நொச்சிக் கன்றுகளை நடவும், பகுதிவாசிகளுக்கு இலவசமாக விநியோகிக்கவும் எத்தனை செடிகள் வேண்டும் என்று தெரிவித்தால், அவற்றை மாநகராட்சி இலவசமாக வழங்கும். இதர நலச் சங்கங்கள், அமைப்புகள், பொதுமக்களும் எத்தனை நொச்சி செடிகள் வேண்டும் என்று தெரிவிக்கலாம்.
இந்த செடிகளை வார்டு அலுவலகங்கள் மூலமாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும். மழைக் காலம் என்பதால் நொச்சி செடி வேகமாக வளரும்.
எனவே, தேவை பற்றிய விவரத்தை மக்கள் விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நொச்சி செடிகள் வேண்டுவோர் [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 044 25619300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications