For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெய்லி 11 மணிக்கு காத்தடிக்குது... இடி இடிக்குது.. ஆனா மழை மட்டும் வர மாட்டேங்குதே.. ஏன் சரவணா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக முற்பகலுக்கு மேல் திடீரென பலத்த காற்று வீசுகிறது. இடி இடிக்கிறது. மின்னல் வெட்டுகிறது. மழை வருவது போல இருக்கிறது. ஆனால் வருவதில்லை. சிறிய தூறலோடு ஓடிப் போய் விடுகிறது.

தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மக்கள் நல்ல மழையில் நனைந்து கொண்டுள்ளனர்.

Chennai gets strong winds but no rain

ஆனால் சென்னையில் நிலைமை சற்று கவலைக்கிடமாகவே உள்ளது. வெயில் மூடி மூடி அடிக்கிறது. முற்பகலுக்கு மேல் வெயில் தணிந்து பலத்த காற்று வீசுகிறது. வானம் கருத்து இடி இடிக்கிறது, மின்னல் கூட வெட்டுகிறது. ஆனால் மழைதான் வருவதில்லை. அப்படியே வந்தாலும் சிறிய தூறலோடு ஓடிப் போய் விடுகிறது.

கடந்த 2 - 3 நாட்களாக இதே அக்கப்போர்தான். ஏன் இந்த நிலை. இது என்ன வகையான சலனம் என்பதை வானிலை ஆய்வு மையம் விளக்குமா?

English summary
Chennai city and its suburbs are getting strong winds for the last few days, but no big rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X