For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடகிழக்கு பருவமழை எதிரொலி.. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

வடகிழக்குப் பருவமழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வடகிழக்கு பருவமழை எதிரொலி.. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு- வீடியோ

    சென்னை: வடகிழக்குப் பருவமழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே தீவிரம் காட்டியது.

    சென்னையில் ஒருவாரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. அதிகளவாக சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஒரே இரவில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டியது.

    சென்னை வெள்ளம்

    சென்னை வெள்ளம்

    இதனால் மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    முடிவுக்கு வந்த பிரச்சனை

    முடிவுக்கு வந்த பிரச்சனை

    சென்னைக்கு குடிநீடி கொடுக்கும் ஏரிகளும் நிரம்பியது. இதனால் சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை முடிவுக்கு வந்தது.

    நீர்மட்டம் உயர்வு

    நீர்மட்டம் உயர்வு

    இந்நிலையில் சென்னையில் தனியார் நிலத்தடி நீர் ஆய்வு அமைப்பு ஆய்வு செய்தது. அதில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

    வறண்டு போன கிணறுகள்

    வறண்டு போன கிணறுகள்

    சென்னை அண்ணாநகர், மயிலாப்பூர், தியாகராய நகர், நந்தனம், கோயம்பேடு ஆகிய இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் நிலத்தடி நீர்மட்டம் 6 அடி வரை குறைந்திருந்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கிணறுகள் வறண்டு கிடந்தன.

    10 அடி வரை உயர்வு

    10 அடி வரை உயர்வு

    இந்நிலையில் தற்போது பெய்த மழையால் அடையாறு, பெசன்ட்நகர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளில் 10 அடி வரை நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதேபோல் நெசப்பாக்கம், மேற்கு மாம்பலம் உள்ளிட்டப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இன்னும் உயர்ந்திருக்கும்

    இன்னும் உயர்ந்திருக்கும்

    மண்ணின் தன்மையை பொறுத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாக நிலத்தடி நீர் ஆய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. கடைசியாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் பெரும்பாலான மழை கடலிலேயே பெய்துவிட்டது. இல்லையெனில் நீர்மட்டம் இன்னும் அதிகளவு உயர்ந்திருக்கும் என இயற்கை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

    English summary
    The Chennai ground water level has increased in many places of the city due to north east monsoon. Mayilapore, T Nagar area ground water level has increased upto 10 feet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X