சரணடைந்த நபரை நீதிமன்றத்துக்குள் புகுந்து கைது செய்வதா? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்
சரணடைந்த நபரை நீதிமன்றத்துக்குள் புகுந்து போலீசார் கைது செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: சரணடைந்த நபரை நீதிமன்றத்துக்குள் புகுந்து போலீசார் கைது செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தோஷ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திருப்பூல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அப்போது சிங்காநல்லூர் போலீசார் நீதிமன்றத்திற்குள் நுழைந்து சந்தோஷை கைது செய்தனர். போலீஸின் இந்த நடவடிக்கை குறித்து திருப்பூர் பார் கவுன்சில் தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பியது.

கோர்ட்டுக்குள் எப்படி கைது செய்யலாம்?
அறிக்கையை படித்து பார்த்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போலீஸின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தில் சரணடைந்தவரை எப்படி கைது செய்யலாம் என்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி போலீஸ்க்கு கேள்வி எழுப்பினார்.

விதிகளுக்கு எதிரானது
தமிழக போலீஸாரின் இந்த செயல் உச்சநீதிமன்ற விதிகளுக்கு எதிரானது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். கோர்ட்டுக்குள் சென்று கைது செய்த போலீஸ் மீது அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

நாகரிகமான நாடா?
நீதிமன்ற அறைக்குள் நுழைந்து யாரையும் கைது செய்யக்கூடாது என்பது கூட காவலர்களுக்கு தெரியவில்லை என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். போலீசின் செயல் நாகரிகமான நாட்டில்தான் வாழ்கிறோமா என சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் கூறினார்.

முக்கிய பிரச்சனை
நீதிமன்ற அறைக்குள் சென்று யாரையும் கைது செய்யக் கூடாது என்ற அவர் நீதிமன்றத்திற்குள் கைது செய்யப்பட்டது முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது என்றார்.
-
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications