இழப்பீடு கோர முடியாது.. வழக்கு செலவையும் நீங்கதான் கொடுக்கனும்.. காஜல் அகர்வாலுக்கு ஹைகோர்ட் குட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒப்பந்தத்தை மீறி தனது விளம்பரப்படத்தை ஒளிப்பரப்பிய எண்ணெய் நிறுவனம் மீது நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் விவிடி தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் நடித்திருந்தார். இதற்காக அந்த நிறுவனத்துடன், காஜல் அகர்வால் கடந்த 2008ம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவர் நடித்திருந்த விளம்பரபடத்தை ஓராண்டுக்கு மட்டும் ஒளிபரப்ப வேண்டுமாம்.

ஓராண்டுக்கு பிறகும்

ஓராண்டுக்கு பிறகும்

இந்த நிலையில், காஜல் அகர்வால் நடித்த விளம்பரத்தை, வி.வி.டி எண்ணெய் நிறுவனம் ஓராண்டுக்கு பின்னரும் ஊடகங்களில் வெளியிட்டு வந்தது. இதுகுறித்து காஜல் அகர்வால் அறிந்ததும், கோர்ட்டை அணுகினார்.

இழப்பீடு கேட்டு வழக்கு

இழப்பீடு கேட்டு வழக்கு

விளம்பரத்திற்கு தடை கோரியும், ஒப்பந்தத்தை மீறி தனது விளம்பர படத்தை ஒளிப்பரப்பியதற்காக ரூ.2.50 கோடி தனக்கு இழப்பீடு கேட்டும் சென்னை ஹைகோர்ட்டில், காஜல் அகர்வால் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு கடந்த 2011ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறது.

உரிமை உண்டு

உரிமை உண்டு

இந்நிலையில் இந்த வழக்கில் ஹைகோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அப்போது காப்புரிமைச் சட்டத்தின் படி, ஒரு விளம்பர படத்தின் உரிமை எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

வழக்கு செலவை கொடுங்க

வழக்கு செலவை கொடுங்க

ஒரு ஆண்டுக்குத் தான் இந்த விளம்பரத்தை வெளியிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்ய முடியாது என்றும் சென்னை ஹைகோர்ட் தெரிவித்தது. மேலும் ஒரு விளம்பரப்படம் எடுத்தால், அந்த படத்தின் மீதான முழு உரிமையும், 60 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்துக்கு சொந்தமானது எனக்கூறி வழக்கை தள்ளிபடி செய்தது. வழக்குக்கான செலவையும் காஜல் அகர்வாலையே செலுத்தக் கூறி ஹைகோர்ட் உத்தரவிட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai high court dismissed Actress Kajal Agarwal case against VVD coconut oil. Gajal Agarwal was filed a case against VVD coconut oil.
Please Wait while comments are loading...