For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணின் வயிற்றில் 15 கிலோ எடையுள்ள கட்டி – டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை

Google Oneindia Tamil News

சென்னை: சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட 52 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து இரண்டு கால்பந்து அளவும், 15 கிலோ எடையும் கொண்ட கட்டியினை அறுவைசிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.

சில ஆண்டுகளாக சுவாசக் கோளாறு மற்றும் சோர்வினால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் குழு பரிசோதனை செய்தனர்.

அப்போது கருப்பையின் வெளிப்புறத்தில் தொடங்கி சிறு குடலின் ஒரு பகுதியையும் ஒரு மிகப் பெரிய தசை கட்டி ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

சுவாசிப்பதில் சிக்கல்:

அந்த பெண் அமரும் போதும் படுக்கும் போதும் இந்த கட்டியானது மேலே உயர்ந்து நுரையீரலை அழுத்திக் கொள்வதால் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

சத்துக் குறைபாடு:

மேலும்,உடலில் சுரக்கும் ரத்தத்தின் பெரும்பகுதி அந்த கட்டியின் வளர்ச்சிக்கு பாய்ந்துக் கொண்டிருப்பதாலும், கருப்பை வழியாக அதீத ரத்தப் போக்கு இருப்பதாலும் அவருக்கு சத்துக் குறைவால் சோர்வு உண்டாகிறது என்பதையும் கண்டறிந்த டாக்டர்கள் உடனடியாக அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

குழந்தை அளவிலான கட்டி:

சுமார் மூன்றரை நேரம் நீடித்த இந்த அறுவைசிகிச்சை போது அந்த பெண்ணின் வயிற்றில் சராசரி குழந்தையின் அளவை விட 5 மடங்கு பெரிதான தசை கட்டி இருப்பதை கண்டு திகைத்துப் போயினர். அந்த கட்டியுடன் கருப்பையையும் சேர்த்து அகற்றிய டாக்டர்கள் அகற்றப்பட்ட கட்டி 15.6 கிலோ எடை இருந்ததாக தெரிவித்தனர்.

துல்லியமான அறுவை சிகிச்சை:

அகற்றப்பட்ட கட்டியையொட்டி பல்வேறு ரத்த நாளங்களும் பின்னப்பட்டிருந்ததால் மிக கவனமாகவும், துல்லியமாகவும் இவர்கள் செயல்பட வேண்டி இருந்தது.

பெண்களுக்கு அதிக வாய்ப்பு:

இனப்பெருக்க தகுதியை கொண்ட பெண்களில் 25 சதவீதத்தினருக்கு இதைப் போன்ற தசைக் கட்டிகள் கருப்பையை சுற்றிலும் ஒற்றையாகவோ, பலவாகவோ உருவாக வாய்ப்புள்ளது.

20 ஆண்டுகள் உருவாக்கம்:

எனினும் இவ்வளவு பெரிய கட்டியை பார்க்கும் போது சுமார் 20 ஆண்டு காலமாக இந்த பெண்ணின் வயிற்றில் அந்த கட்டி உருவாகியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம்:

இதற்கு முன்னர் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து நீக்கப்பட்ட 9.6 கிலோ கருப்பை கட்டி தான் மிகப் பெரியதாக கருதப்பட்டது. அபரிமிதமான ஈஸ்ட்ரோஜன் சுரப்பினால் இவ்வகை கட்டிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai lady was suffered by the 15kg ovarian tumor. Doctors successfully removed the tumor by operation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X