சின்னமலை- விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை: கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: விமானநிலையம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி மற்றும் சின்னமலை ரயில் நிலையங்கள் இன்று திறந்துவிடப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து விமான நிலையத்திற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் இருந்து சின்னமலை செல்ல 40 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலையம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

ரயில் நிலையத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட உள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார் ஜெயலலிதா.
கட்டணம் எவ்வளவு
கோயம்பேட்டில் இருந்து புறநகர் பேருந்து நிலையம் ரூ.10 அரும்பாக்கம், வடபழனிக்கு ரூ. 20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அசோக்நகருக்கு ரூ. 30, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், தோமையார்மலை, நங்கநல்லூருக்கு ரூ. 40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து சின்னமலை செல்ல 40 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்ட பின்பு, முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அந்த துவக்கத்தின் போது முக்கியமாக சொல்லப்பட்ட விஷயம் கட்டணம் அதிகளவில் இருப்பது. ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு செல்வதற்கு ரூ.40 வசூலிக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து விமான நிலையத்திற்கு ரூ. 50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவையை பொதுவாக மக்கள் உபயோகப்படுத்தாதற்கு முக்கிய காரணம் மாநகர பேருந்துகளில் செல்லும்போது ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு செல்வதற்கு ரூ.13 ஆகும். ஆனால் மெட்ரோவில் சென்றால் ரூ.40 வசூலிக்கப்படுகிறது. ஆகவே நடுத்தர மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பொதுவாக பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications