பார்த்து பார்த்து கட்டிய மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம்... 3 விநாடிகளில் தரைமட்டம்- எழுந்த இடியோசை
சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக்கட்டடம் 3 விநாடிகளில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இன்று திட்டமிட்டபடி இடிக்கப்பட உள்ளது. இதற்காக வெடிபொருள் நிரப்பும் பணி 8 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு நிறைவடைந்தது. மழையாலும், தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவும் மாலை 6.55 மணியளவில்தான் இந்த கட்டடம் இடிக்கப்பட்டப்பட்டது. பல மாதங்கள் பார்த்து பார்த்து கட்டப்பட்ட 11 மாடிக் கட்டடம் மூன்றே விநாடிகளில் தரைமட்டமாகி புழுதி புயலாய் மாறி கான்கரீட் குவியலானது.

கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி சென்னை மவுலிவாக்கத்தில் இருந்த இரண்டு 11 மாடி கட்டடங்களில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டடத்தை இடிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டடத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆய்வு குழுவினர் கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், கட்டடத்தை இடிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. மவுலிவாக்கம் 11 மாடி கட்டடத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கட்டடம் இன்று இடிக்கப்பட்டது.
உள்வெடிப்பு முறை (இன்ப்ளோஷன்) மூலம் வெடிக்க திருப்பூரில் உள்ள மேக்லிங்க் கட்டுமான நிறுவனத்துடன் சிஎம்டிஏ ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, இன்று மாலையில் இடிக்கப்பட்டது. இந்த கட்டடத்தை இடிக்கும் பணிக்கு மழை போன்ற இயற்கை பேரிடர்கள் எந்த விதத்திலும் தடங்களாக இருக்காது. மின்னல், இடி போன்றவை வந்தால் மட்டுமே, இக்கட்டடத்தை இடிக்கும் பணி தள்ளிப்போகுமே தவிர, மற்ற எந்த வகையிலும் இந்த கட்டடம் இடிப்பு பணி தள்ளிப்போகாது என்றும் தெரிவித்திருந்தார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அந்த கட்டடத்தை சுற்றி 200 மீட்டர் பரப்பளவுக்குள் யாரும் இருக்கக்கூடாது என்று நேற்றே தெரிவித்துவிட்டது. அதன்படி கட்டடத்தை சுற்றியுள்ள சுமார் 120 வீடுகளில் வசிப்பவர்கள் யாரும் இருக்க வேண்டாம். அருகில் மதநந்தபுரம் என்ற இடத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இன்று மதியம் 12 மணிக்கு கட்டிடத்தை சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் யாரும் இருக்க வேண்டாம். அவர்கள் மண்டபத்திலோ அல்லது உறவினர்கள் வீட்டிலோ தங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டனர். மேலும், சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், கட்டடத்தை சுற்றி நிறுத்தப்பட்டன.
3 விநாடிகளில் தரைமட்டம்
கட்டத்தை இடிப்பதற்காக காலை 8 மணிக்கு ஒவ்வொரு தளமாக வெடிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது. இந்த வெடிபொருள்கள் 10 மணிக்கு நிரப்பி முடிக்கப்பட்டன. பிற்பகலில் தொடர் வெடிப்பு முறை மூலம் அடுத்தடுத்த விநாடிகளில், தகர்க்கப்படும் என்று கூறப்பட்டது. மழையால் மாலையில் கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும் கட்டடம் தகர்ப்பதில் தாமதமானது. இதனால் கட்டடம் எப்போது இடிக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இடியோசை கேட்டது
இருட்டவும், நேரம் செல்லச் செல்ல அச்சம் அதிகரித்தது. ஒருவழியாக 6.55 மணிக்கு கட்டடம் தரைமட்டமானது. தமிழகத்தின் மிகப்பெரிய கட்டட தகர்ப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்ட போது இடியோசை போல சத்தம் கேட்டது, அந்த பகுதியில் மேலும் லேசான அதிர்வும் உணரப்பட்டது.
போக்குவரத்து, மின்சாரம் தடை
கட்டடம் இடிக்கப்பட்டதை அடுத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கட்டடம் இடித்து முடிக்கும்வரை 12 மணி நேரம் மின்சாரம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. கட்டடம் இடிக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து சீரானது, மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. கட்டடம் முழுவதுமாக இடிக்கப்பட்ட பின்னர், தூசி, புகைகளை தண்ணீர் பீச்சியடித்து அனைத்த பின்னர் வெளியேற்றப்பட்டோர் மீண்டும் வீடுகளுக்கு அனுமதிக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேரில் காண ஆர்வம்
கட்டடம் முழுவதுமாக இடிக்கப்பட்டதை ஏராளமானோர் தங்களின் வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்று பார்த்தனர். பல கோடி செலவு செய்து, பார்த்து பார்த்து கட்டப்பட்ட கட்டடம் சில விநாடிகளில் இடிந்து தரைமட்டமானது, புகை மண்டலம் கிளம்பியது. சில மணிநேரங்களுக்கு முன்பு வரை எப்போது இடிந்து விழுந்துமோ என்று அச்சுறுத்திய கட்டடம் இப்போது தரைமட்டமானதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications