இரட்டை சந்தோஷத்தில் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர்கள்... ஒன் இந்தியாவின் லைவ் ரிப்போர்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சென்னை மாவட்ட ரசிகர்கள் இரட்டை சந்தோஷத்துடன் காத்திருந்தனர். ஒருபக்கம் ரஜினியுடன் தனித்தனியே புகைப்படம், மற்றொருபுறம் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை நேரில் கேட்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற உற்சாகத்துடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

சென்னையில் நடிகர் ரஜினி 6வது நாளாக இன்று ரசிகர்களை சந்திக்கிறார். இன்று சென்னை மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இதற்காக அடையாள அட்டை வழங்கப்பட்டவர்கள் மட்டும் தீவிர சோதனைக்குப் பிறகு மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து ரசிகர் மன்றக் கொடிகளுடன் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மண்டபத்திற்குள் காத்திருந்தனர். பெண்கள், குழந்தைகள் என பலர் குடும்பத்துடன் வந்து காத்திருந்தனர். ரஜினியுடன் தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுப்பதோடு இன்று அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று ரஜினி கூறியதால் அந்த வரலாற்று சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியாக நினைத்து ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து குவிந்திருந்தனர். ரஜினியை பார்க்க ரசிகர்கள் குவிந்திருக்கும் ராகவேந்திரா மண்டபத்தின் லைவ் ரிப்போர்ட்டை ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக ஒளிபரப்பி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
One india tamil live report : Chennai Rajini fans were in double happy at Ragavendra Kalyana mandapam. one side they were taking photo with him individually and another side taking part in his mass announcement.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X