2 மணி நேரத்தில் 11 செ.மீ மழை.. மிதக்கிறது சென்னை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல இடங்களில் மாலை 4 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உயரமான இடங்களுக்கு செல்லுங்கள் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

Chennai recieved 11 CM rain with in 2 hours

சென்னையில் இரவில் ரயில், சாலை போக்குவரத்துக்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. இதனால் கத்திப்பாரா சந்திப்பு உட்பட பல இடங்களில் இஞ்ச், இஞ்ச்சாக வாகனங்கள் நகர்ந்து கொண்டுள்ளன.

நுங்கம்பாக்கம் பகுதியில் கடந்த 2 மணி நேரத்தில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. துரைப்பாக்கம் பகுதியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே இரவுடன் மழை நின்றுவிடும் என்று தனியார் வானிலை ஆய்வு நிபுணர் ராஜேஷ் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai recieved 11 CM rain with in 2 hours.
Please Wait while comments are loading...