”7 தமிழர்களை விடுதலை செய்”-சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட தமிழ் தேசிய அமைப்பு
சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு தமிழர்களின் விடுதலையை தடுக்க நினைக்கும் இந்திய அரசை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகையிடப்பட்டது.
ஏழு தமிழர்களின் விடுதலை விவகாரத்தில் இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பலரும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டனர்.
ராஜீவ் கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களை தமிழக அரசு விடுவிக்க சம்மதம் தெரிவித்த போதும் இந்திய அரசு உச்சநீதி மன்றத்தில் எதிர் மனு அளித்து தமிழர்களின் விடுதலையை தடுத்து நிறுத்தி உள்ளது. இது உலகத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது .
ராஜீவ் கொலையில் நேரடியாக பங்குபெறாத இந்த ஏழு தமிழர்களும் 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டனர் . இதில் மூன்று பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பு வெளிவந்த பிறகும் இந்திய அரசு தொடர்ந்து தமிழர்களை தண்டிக்க நினைப்பது நியாமில்லை .
இதனைப் பற்றி அத்தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள்,"இந்திய நடுவண் அரசின் தமிழர் விரோதப் போக்கை நாங்கள் கண்டிக்கின்றோம். ஏழு தமிழர்களை சிறையில் இருந்து நாங்கள் விடுவிப்போம். எந்த தவறும் செய்யாத பேரறிவாளன் தன்னுடைய வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்கின்றார் . மற்றவர்களும் கொடுமையான ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டனர் . இனியாவது இவர்கள் நிம்மதியாக சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்திய அரசு அனுமதிக்க அளிக்க வேண்டும்.
இந்திய அரசு தொடர்ந்து தமிழர்களை வஞ்சித்தால் தமிழர்களுக்கு இந்திய அரசின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும். அதனால் இந்திய அரசு தமிழர் விரோதப் போக்கை கைவிட்டு ஏழு தமிழர்களின் விடுதலைக்கு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது என்று இந்த முற்றுகை போராட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்"என்று கூறியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications