For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரத்ததானம் நடத்தி மே தினத்தைக் கொண்டாடிய சென்னை சில்க்ஸ் ஊழியர்கள்!

Google Oneindia Tamil News

கரூர்: தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று ரத்ததானத்தில் பங்கேற்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரத்தத்தை தானமாக அளித்தனர்.

கரூர் தி சென்னை சில்க்ஸ் கிளையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிர்வாக இயக்குநர்கள் கே.சிவலிங்கம் மற்றும் என்.கே.நந்தகோபால் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டும், தொழிலாளர் தினத்தை முன்னிட்டும் நடைபெற்ற இந்த ரத்ததான முகாம் பூஜையுடன் வேதவிற்பனர்கள் வேதம் முழங்க தொடங்கியது.

Chennai silks staffs participate blodd donation on the eve of May 1

கரூர் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்ரீ சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்க மாளிகை இணைந்து நடத்திய இந்த ரத்ததான முகாமில் சென்னை சில்க்ஸ் பொதுமேலாளர் டி.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் தி சென்னை சில்க்ஸ் கரூர் கிளை மேலாளர் மணிகண்டன், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை கரூர் கிளை மேலாளர் தர்மராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Chennai silks staffs participate blodd donation on the eve of May 1

மேலும் இதே போல திருச்சி, வேலூர், திருப்பூர், ஊட்டி உள்பட தமிழகத்தின் அனைத்து கிளைகளிலும் இந்த ரத்ததான முகாம் நடக்கிறது என்றும் மேலும் வருடந்தோறும் தி சென்னை சில்க்ஸின் அனைத்து கிளைகளிலும் கோடை காலத்தை முன்னிட்டு அனைவரும் பயன் பெறும் வகையில் நீர் மோர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் பொதுமேலாளர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

Chennai silks staffs participate blodd donation on the eve of May 1

மேலும் திருச்சி கிளையில் கடந்த 10 வருடங்களாக மாபெரும் கண்மருத்துவ முகாம் ஏழை எளியோர்களுக்கு இலவசமாக நடைபெற்று வந்த நிலையில் வரும் ஜுன் மாதம் 11 வது ஆண்டாக மாபெரும் கண்மருத்துவ முகாம் இலவசமாக ஏழை எளியோர்களுக்கு நடத்தப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Thousands of The Chennai silks staffs participated in a blodd donation camp today on the eve of May 1 all over Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X