சென்னை பெண் என்ஜினியர் கொலையாளிகள் இருவருக்கு 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி

சென்னை: சென்னை சிறுசேரியில் பெண் என்ஜினியர் உமாமகேஸ்வரியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இருவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையை அடுத்த சிறுசேரியில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்த என்ஜினியர் உமா மகேஸ்வரி கடந்த 13ந் தேதி காணாமல் போனார். பின்னர் 22-ந் தேதி சிறுசேரி சிப்காட் வளாகத்தில் அவர் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக முதலில் சென்னையில் நேற்று முன்தினம் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்த விசாரணைகளில் கொல்கத்தாவில் வைத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் இந்த வழக்கில் 6 பேர் பிடிபட்டுள்ளனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் வரும் 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் சிபிசிஐடி போலீசார் சார்பில் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள் இருவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications