68வது குடியரசு தினம்: தமிழகத்தில் 1.12 லட்சம் போலீசார் பாதுகாப்பு- சென்னையில் பலத்த கண்காணிப்பு
குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: நாட்டின் 68வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி நாளை பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, தலைநகர் டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 60 ஆயிரம் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடியரசு தின விழா பேரணி நடைபெறும் பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. பொதுமக்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை வைக்கும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
உச்சக்கட்ட பாதுகாப்பு
குடியரசு தின அணிவகுப்பு நடத்தப்படும் இடத்திலும் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்துப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றி கமாண்டோ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போல் மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் பாதுகாப்பு
இதேபோன்று, ஜம்மு காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதத் தாக்குதலை உடனே எதிர்கொண்டு முறியடிக்கும் சிறப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லை வழியே ஊடுருவும் தீவிரவாதிகள் நாட்டின் குடியரசு தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
தயார் நிலையில் துணை ராணுவம்
வைஷ்ணவா தேவி கோவில் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ரஜோரி மாவட்டத்தில் காவல்துறையினர் சீருடையுடன் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். கடும் பனி மற்றும் மழை காரணமாக மோசமான வானிலை காணப்பட்ட போதும் பாதுகாப்புக்கான அணிவகுப்பு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் பாதுகாப்பு
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்கள், தினசரி சந்தைகள்,வழிப்பாட்டு ஸ்தலங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியில் இரு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு
அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சுமார் 1.12 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் 15 ஆயிரம் பேர்
சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். பிரச்னைக்குரிய பகுதிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தின விழா ஒத்திகை
குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காமராஜர் சாலையில் இன்று முழுவதும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications