சென்னையில் இன்று மாலைக்குப் பின் கனமழை வெளுக்குமாம்.. வார்னிங் கொடுத்துடுச்சு நார்வே வானிலை மையம்!

சென்னையில் இன்று மாலைக்குப் பின் கனமழை பெய்யும் என நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் கனமழை வெளுக்குமாம்...வானிலை மையம்! வார்னிங்- வீடியோ

    சென்னை: இன்று மாலைக்குப் பின் கனமழை பெய்யும் என நார்வே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இன்று இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை சென்னையில் மழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே அடித்து ஆடியது வடகிழக்குப் பருவ மழை.

    காவிரி டெல்டாவில் கொட்டிய மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. சென்னையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    சென்னையில் வெள்ளம்

    சென்னையில் வெள்ளம்

    இதனால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. மெரினாவில் கொட்டித் தீர்த்த 30 சென்டி மீட்டர் மழையால் கடல் எது கரை எது என தெரியாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது.

    மீண்டும் வேலை தொடக்கம்

    மீண்டும் வேலை தொடக்கம்

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னையில் விடுமுறை விட்டிருந்த மழை நேற்று முதல் மீண்டும் வேலையை ஆரம்பித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    இன்று முதல் இருக்கு..

    இன்று முதல் இருக்கு..

    இந்நிலையில் இன்று மாலைக்குப் பின் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று இரவு முதல் விடிய விடிய கனமழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.

    கனமழை நீடிக்கும்..

    கனமழை நீடிக்கும்..

    நாளை பகல் வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் நார்வே நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை பகலுக்குப் பின் சென்னையில் மிதமான மழை விட்டுவிட்டு பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

    எதிர்பார்ப்பு அதிகரிப்பு..

    எதிர்பார்ப்பு அதிகரிப்பு..

    இன்று இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை சென்னையில் மழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நார்வே நாட்டு வானிலை மைய கணிப்புகள் பலித்துள்ளதால் இன்றைய கணிப்பு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+