சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது!
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம் பெண்ணை அடித்துக் கொன்ற முதியவரை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி காமாட்சி (28). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மகேந்திரனுக்கும் (64) பணம் கொடுக்கல் வாங்கலில் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன், ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பெண்ணை காட்டுமன்னார்கோவிலுக்கு வர சொன்னாராம். அப்போது அந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனை செருப்பால் அடித்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் அவருடைய உறவினர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பிவிடுவதாக காமாட்சி மிரட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வீடியோவை காமாட்சி வாட்ஸ் ஆப்பில் அனுப்பினாராம். இது மகேந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே கடுங்கோபத்துடன் காமாட்சியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை அங்கிருந்த கட்டையை கொண்டு கடுமையாக தாக்கினாராம். இதனால் பலத்த காயமடைந்த காமாட்சி அதே இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
ஆனாலும் ஆத்திரம் தீராத மகேந்திரன் அங்கிருந்த காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனையும் கட்டையால் அடித்ததாக தெரிகிறது. அதில் அவர் படுகாயமடைந்தார். உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று காமாட்சியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து காமாட்சியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கடலூர் மாவட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உல்லாசத்திற்கு வர மறுத்த பெண்ணை முதியவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications