தீவிர அரசியலுக்கு முழுக்குப் போடுகிறார் ப.சிதம்பரம்- கிளப்பி விடும் ஜி.கே.வாசன் கோஷ்டி
சென்னை: தீவிர அரசியலுக்கு முழுக்குப் போட முடிவு செய்துவிட்டதாலேயே சோனியா- ராகுலை ப. சிதம்பரம் விமர்சிப்பதாக ஜி.கே.வாசன் கோஷ்டியினர் டெல்லிக்கு தகவல்களை பறக்க விட்டுவருகின்றனர்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அமைதியாக இருந்த ப. சிதம்பரம், திடீரென ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சோனியா, ராகுலை விமர்சித்த கையோடு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராவார் என்றும் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதிய ஜி.கே. வாசன், ப. சிதம்பரத்துக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்தார். அதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனில் சாஸ்திரி, ரஷீத் ஆல்வி உள்ளிட்டோரும் சிதம்பரத்துக்கு எதிராக சாட்டையை சுழற்றியுள்ளனர்.
இத்துடன் விட்டுவிடாத ஜி.கே.வாசன் கோஷ்டியினர், அரசியலைவிட்டே ஒதுங்குவது என்று ப.சிதம்பரம் முடிவு செய்துவிட்டார்.. இதனாலேயே காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்து வருகிறார். அத்துடன் எழுத்து என்ற இலக்கிய இயக்கத்தை தொடங்கி முழுதாகவே ஒதுங்கத் தொடங்கிவிட்டார் என்று டெல்லிக்கு தகவல்களை அனுப்பி வருகின்றனர்.
இதனால் ப. சிதம்பரம் கோஷ்டியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்










Click it and Unblock the Notifications