For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேறு பெஞ்ச்சுக்கு மாற்றம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டனர்.

Civic polls: Contempt of court transfers to another bench

ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அதிகாரிகள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணை தாக்கல் செய்யப்படும் என்றிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணையை தாக்கல் செய்யாததற்கு எதிராக திமுக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் நீதிபதிகள் சத்யநாராயணன், சுந்தர் அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

English summary
State Election commission didnt submit schedule for Civic Polls though the HC orders to do so. The contempt of court case transfers to another bench.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X