டிவிட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்த தமிழக முதல்வர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கென தனி டிவிட்டர் அக்கவுண்ட் துவக்கப்பட்டு அரசு மற்றும் முதல்வரின் நடவடிக்கைகள், திட்டங்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் இணைந்த பிறகு சமூக வலைத்தளம் மூலமான மக்கள் தொடர்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

CM Edappadi Palanisamy joins Twitter

இதன் ஒரு பகுதியாக முதல்வருக்காக @CMOTamilNadu என்ற பெயரில் டிவிட்டர் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட கணக்கு என்பதால் டிவிட்டர் இன்னும் 'வெரிஃபைட்' அங்கீகாரம் தரவில்லை. இருப்பினும் இதுதான் முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு என்று அதிமுக ஐடி பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துணை முதல்வராகும் முன்பிருந்தே பன்னீர்செல்வம் டிவிட்டரில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இப்போது முதல்வரும் டிவிட்டர் களத்தில் இறங்கியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu CM Edappadi Palanisamy joins Twitter and giving regular updates on daily events and announcements.
Please Wait while comments are loading...