25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் சரி உங்களால் முடியவே முடியாது.. திமுகவுக்கு முதல்வர் பதில்

Subscribe to Oneindia Tamil

சூலூர்: 25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் சரி உங்கள் ஆட்சியை பிடிக்கவே முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி என்பது அதிமுக, திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகியுள்ளது.

இந்த தேர்தல் ஆட்சிமாற்றத்துக்கு வித்திடும் என திமுகவால் நம்பப்படுகிறது. இந்த நிலையில் சூலூர் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜல்லிப்பட்டி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

குடும்பம்

குடும்பம்

அப்போது அவர் பேசுகையில், தமிழக மக்கள் வளர்ச்சி அடைவதற்காக உருவாக்கப்பட்டதுதான் அதிமுக. ஆனால் திமுகவோ அவர்களுடைய குடும்பம் ஏற்றம் பெறுவதற்காக உருவாக்கப்பட்டது.

கையாண்டவர்

கையாண்டவர்

2 நாட்களுக்கு முன்பு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் 25 நாட்களில் புதிய முதல்வரை உருவாக்கிக் காட்டுவேன் என கூறியிருந்தார். அவரது மகனை எம்பியாக்க குறுக்கு வழிகளை கையாண்டவர்தான் இந்த துரைமுருகன்.

மக்கள்

மக்கள்

இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 12 கிலோ தங்கம், ரூ 13 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

25 ஆண்டுகள்

25 ஆண்டுகள்

25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது. மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபோது எதாவது கிராமத்திற்கு சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டது உண்டா?

அமோக வெற்றி

அமோக வெற்றி

சூலூர் சட்டமன்ற தொகுதி என்றென்றும் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் வருகின்ற தேர்தலில் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+