For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திறந்த ஜீப்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரச்சாரம்... ஆர்கே நகரில் தாரை தப்பட்டைகளோடு அதகளம்!

அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக வேட்பளார் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருபுறம் அதிமுகவின் கோட்டையான ஆர்கே நகரை கைவிட்டால் அது இனி வரும் தேர்தல்களுக்கு எடுத்துக்காட்டாகி விடும். மற்றொரு புறம் இரட்டை இலை சின்னம் கிடைத்த வெற்றியோடு போட்டியிடுவதால் அதற்கான மதிப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் என்று அதிமுகவிற்கு இந்த தேர்தல் பலமுனை நெருக்கடிகளைத் தந்துள்ளது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வேட்பாளர் தான் வெற்றி பெறுவார் என்பது எழுதப்படாத அரசியல் விதியாக இருக்கிறது. ஆனால் ஆர்கே நகர் இடைத்தேர்தலை அப்படி கணிக்க முடியாத சூழல் இருக்கிறது.

யாருக்கு வெற்றி?

யாருக்கு வெற்றி?

ஏனெனில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள், இணைப்புகளும் இதற்கு ஒரு காரணம். மற்றும் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு மாபெரும் தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறப்போகிறது என்று கணிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறது.

தினகரன பிரச்சாரம் இல்லை

தினகரன பிரச்சாரம் இல்லை

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ஆர்கே நகர் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் சசிகலா அணியைச் சேர்ந்த தினகரனுக்கு மட்டும் ஆர்கே நகரில் பிரச்சாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இது குறித்து தினகரன் தரப்பினர் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் முறையிட்டுள்ளனர்.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

இந்நிலையில் இன்று காலையில் கொருக்குப்பேட்டையில் உள்ள கோயிலில் முதல்வர், துணை முதல்வர் சாமி கும்பிட்டுவிட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இரட்டைக் குழல் துப்பாக்கிகள் பிரச்சாரத்தையொட்டி ஆர்கே நகரில் கரகாட்டம், தப்பாட்டம் என்று வரவேற்புகள் தடபுடலாக இருந்தது.

ஜெ செய்த நல்லவற்றை சொல்லி வாக்கு சேகரிப்பு

ஜெ செய்த நல்லவற்றை சொல்லி வாக்கு சேகரிப்பு

வழக்கமாக பச்சை நிற சேலையில் வரும் அதிமுக மகளிரணியினர் இன்று கேரள பாரம்பரிய சேலையில் வந்து கலச கும்பங்களை ஏந்தி நின்றனர். அதிமுகவின் அருமை பெருமைகளையும், ஜெயலலிதா இந்த தொகுதி மக்களுக்கு செய்த விஷயங்களையும் கூறி முதல்வரும், துணை முதல்வரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

English summary
Tamilnadu CM Palanisamy and Deputy CM Paneerselvam begins their campaign for ADMK candidate Madhusudhanan in an open Jeep.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X