மருத்துவமனைகள் தவறால் இறந்த தமிழர்.. தமிழில் டிவிட் செய்து மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சாலை விபத்தில் சிக்கிய நெல்லை பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு கேரள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் உயிரிழந்தார்.இதற்கு டிவிட்டரில் தமிழில் எழுதி மன்னிப்பு கேட்டுள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.

"மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் உறவினர்களிடம் கேரள மக்களின் சார்பாக முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரினார்" என்றும்,

 CM Pinarayi Vijayan tendered an apology to Tamilnadu man family

"விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சையளிக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும் - பினராயி விஜயன்" என்றும் இரு டிவிட்டுகளை தமிழிலேயே வெளியிட்டுள்ளார் அவர்.

பிறகு இதுகுறித்து ஆங்கிலத்திலும் டிவிட்டுகள் வெளியிட்டுள்ளார் பினராயி விஜயன். முதல்வரின் இந்த செயல்பாடுகளை தமிழ் நெட்டிசன்கள் வரவேற்றுள்ள அதே நேரத்தில், அவர் கூறியதை போலவே உறுதியாக நடவடிக்கை எடுத்து இனி யாருமே இப்படி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Pinarayi Vijayan tendered an apology on behalf of the State & its people to the family of Murugan.
Please Wait while comments are loading...