கர்நாடக தேர்தல் வெற்றி: கோவையில் பாஜகவினர் மேளதாளத்துடன் ஆரவார கொண்டாட்டம்

Posted By: T Nandhakumar
Subscribe to Oneindia Tamil

கோவை: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கோவையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மேள தாளத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்து பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து ஆட்சியமைக்க உள்ளது.

Coimbatore Bjp Celebration Due To Karnataka Election Victory

இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் கோவையில் அக்கட்சியினர் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இதனை முன்னிட்டு, சித்தாபுதூர் பகுதியிலுள்ள அக்கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும் மேள தாளங்கள் முழங்க ஆடி பாடியும் மகிழ்ந்தனர். மேலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கர்நாடக வெற்றியை கொண்டாடினர்.


வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP won majority in Karnataka elections. Following this, the BJP celebrated it in Coimbatore. The party mobs gathered in front of the office of the party and cracked the firecrackers and enjoyed the dance. They also celebrated Karnataka victory by giving sweets to the public and volunteers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற