கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடி மாற்றம்.. பெரியய்யா புதிய கமிஷனராக நியமனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த பெரியய்யா கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. அதன்படி கோவை காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை நகர புதிய ஆணையராக பெரியய்யாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Coimbatore Police commissioner Amalraj transferred to Trichy

திருச்சியில் ஆணையராக இருந்த அருண் சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நிர்வாக ஐ.ஜியாக வெங்கடராமன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சென்னை காவல் நிர்வாக ஐ.ஜி.தினகரன் எஸ்டாபிளிஸ்மென்ட் ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி.யாக சேனல் வி.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக அமாநத் மன் இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆளுநருடனான ஆலோசனை கூட்டத்தில் கோவை ஆணையர் பங்கேற்றதால் இந்த இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu govt has transferred Seven IPS officers. Coimbatore Police commissioner Amalraj transferred to Trichy.periyayiya apointed as new commissioner of Police coimbatore.
Please Wait while comments are loading...