காதலை மறுத்த பிரியா.. அரிவாளை எடுத்த இசக்கிமுத்து.. ஓடி வந்த அண்ணனுக்கும் வெட்டு!
கல்லூரி மாணவியை இளைஞர் அரிவாளால் வெட்டி தப்பி உள்ளார்.
ஏர்வாடி: ஒரு வருஷமாக எத்தனையோ முறை தனது காதலை சொல்லியும் ஏற்காத காரணத்தினால் கல்லூரி மாணவியை இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏர்வாடி அருகே உள்ள பகுதி ராமகிருஷ்ணாபுரம். இங்கு வசித்து வரும் பிரியா என்னும் இளம் பெண்ணை இசக்கி முத்து என்பவர் காதலித்து வந்துள்ளார். அதனால் போன வருடம் பிரியாவை நேரில் சந்தித்து தனது காதலையும் சொன்னார்.

பிளாடால் கிழித்தார்
ஆனால் பிரியாவோ, எனக்கு காதல் எல்லாம் பிடிக்காது என்று சொல்லி இசக்கிமுத்துவை மறுப்பு சொல்லி இருக்கிறார். பிரியா காதலிக்க மாட்டேன் என்று சொல்லவும், இசக்கிமுத்து, ஆத்திரம் அடைந்து தன்னிடமிருந்த பிளேடை வைத்து பிரியாவின் முகத்தை கிழித்துள்ளார். இது பெரிய பிரச்சனை ஆகி போலீசில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

கட்டாயப்படுத்தினார்
ஆனாலும் இசக்கிமுத்துவுக்கு பிரியா மேல் இருந்த காதல் குறையவில்லை. அதனால் தொடர்ந்து தன் காதலை ஏற்று கொள்ளுமாறு செல்போனில் கேட்டுக் கொண்டே இருந்தார். நேற்றிரவும் போன் செய்த இசக்கிமுத்து, பிரியாவை எப்படியாவது தன்னை காதலிக்க கட்டாயப்படுத்தினார். கடைசி வரை பிரியா ஒத்துக் கொள்ளவில்லை.

அரிவாள் வெட்டு
அதனால் ஆத்திரம் அடைந்த இசக்கி முத்து, இன்று காலை நேராக பிரியா வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே தூங்கி கொண்டிருந்த பிரியாவை கையிலிருந்த அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டினார். சுதாவின் கழுத்து, கைகளில் பலமான அரிவாள் வெட்டு விழுந்தது. பிரியாவின் அலறல் சத்தம் அவரது அண்ணன் அங்கே ஓடிவந்தார். அவரையும் இசக்கி முத்து வெட்டினார்.

வழக்கு பதிவு
அண்ணன்-தங்கை இருவரும் கூச்சல் போடவும் அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் இசக்கி முத்து தப்பி ஓடிவிட்டார். பிறகு படுகாயம் அடைந்த இருவரும் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications