ஒரத்தநாடு அருகே புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல்..மக்கள் சாலை மறியல்
ஒரத்தநாடு அருகே புத்தாண்டு விழா கொண்டாடியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
ஒரத்தநாடு : ஒரத்தநாடு அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே அடிதடி மோதல் நேற்றிரவு நடந்து உள்ளது. இந்சம்பவம் குறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலப்பட்டு - தெற்கு குடிக்காடி கிராமத்தில் புத்தாண்டு விழாவையொட்டி ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் வண்ண தோரணங்கள், பலூன் கட்டி கொண்டாடி உள்ளனர். இதனை அதே பகுதியில் உள்ள வேறு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் தோரணங்களை கிழித்து வீசி சேதப்படுத்தி உள்ளனர். இதை எதிர்த்த சில இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் புத்தாண்டு கொண்டாடிய இளைஞர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்ற 80 பேர் அடங்கிய மற்றொரு கும்பல் அங்கு அவர்களது உடமைகளை அடித்து சூறையாடியது. மேலும் அவர்களது சாதியை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியும், மக்களை அடித்தும் துன்புறுத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்து உள்ளனர். 15 இரு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications