தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற முடியாது- முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சிபிஎம் பொது செயலாளர் பேபி
சென்னை: தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் ஒரு போதும் காலூன்றவே முடியாது; திமுக கூட்டணி வலுவாக இருப்பதாலேயே மதவாத சக்திகள் தமிழகத்தில் தலையெடுக்க முடியாது; இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டிய மாடலாக தமிழகத்தில் திமுக கூட்டணி அமைந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் பேபி தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை அண்மையில் சிபிஎம் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஏ. பேபி இன்று சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேபி கூறியதாவது: சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்தேன். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. மதுரையில் நடைபெற்ற சிபிஎம் அகில இந்திய மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.தமிழ்நாடு அரசு, இந்த மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தேன்.
தமிழ்நாட்டுக்கு தந்தை பெரியார் தொடங்கி மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. தமிழ்நாட்டில்தான் அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நிற்கின்றன. இந்த கூட்டணிதான் இந்தியாவுக்கே வழிகாட்டும் கூட்டணியாக உள்ளது. தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற முடியாமல் இருப்பதற்கும் இந்த கூட்டணிதான் காரணம். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் வலுவான ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.
மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கிறது அதிமுக. ஆனால் அதே மதவாத சக்திகளுடன் அதிமுக, தமிழகத்தில் கைகோர்த்து நிற்கிறது. தமிழக மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இதனை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்வர்.
மத்திய பாஜக அரசின், சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு வக்பு சட்டம்தான் நல்ல உதாரணம். ஆகையால்தான் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி சந்தர்ப்பவாத அணியாகும்.
மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டப் போராட்டத்தில் திமுக முன்னணியில் நின்று வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்க மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தோழர்களையும் நான் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் மிக வலுவான கட்சியாக திமுக உள்ளது.
இன்றைய சந்திப்பில் தேர்தல் கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. பாஜக - அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி பற்றி விவாதித்தோம். பாஜக - அதிமுக கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை. இவ்வாறு பேபி கூறினார்.
-
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications