ஓகி புயலால் இறந்தவர்களுக்கு இரங்கல்.. சட்டசபையில் 2 நிமிடம் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓகி புயலால் இறந்தவர்களுக்காக இன்று சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சட்டசபையின் இரண்டாவது நாள் கூட்டம் தற்போது நடக்கிறது.

இந்த வருடத்தில் நடக்கும் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை தொடங்கி வைத்து பேசினார்.

Condolence for Ockhi death in TN assembly

திமுக உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் அனைத்தும் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் தற்போது நடைபெறுகிறது.

ஓகி புயலால் மரணம் அடைந்தவர்களுக்கு சட்டசபையில் தற்போது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதேபோல் மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக சட்டசபையில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் நேற்று ஆளுநர் பேசிய உரை மீதான விவாதம் இன்று நடைபெறும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
First Session of the Tamil Nadu Legislative Assembly started yesterday. Governor Panwari Lal Purohit inaugurated the assembly. Governor speaks about several issues of TN in assembly. Condolence for Ockhi death will take place in TN assembly.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற