For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அள்ளிக்கொடுத்த ம.பி., உ.பி.க்காகத்தான் ராஜபக்சேவை அழைக்கிறீர்களா? கேட்பது பீட்டர் அல்போன்ஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Cong questions invite to Rajapaksa
சென்னை: பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க காரணமாக இருந்த மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தினரை மகிழ்ச்சிப்படுத்தத்தான் ராஜபக்சேவை பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறீர்களா? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது:

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பதை திடீரென மாற்றிவிட முடியாது. அதே நேரத்தில் பிரதமராக பதவியேற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அண்டை நாட்டு தலைவர்களை அழைத்தாக வேண்டும் என்று அரசியல் சாசன சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. எந்த ஒரு நெருக்கடியுமே இல்லாத சூழலில் பாஜக ஏன் ராஜபக்சேவை அழைக்கிறது?

அப்படி இருக்கையில் சார்க் நாடுகளின் தலைவர்களை இப்போதே பாரதிய ஜனதா அழைக்க வேண்டியதன் நோக்கம் என்ன? மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், சிங்களவர்களை தொப்புள்கொடி உறவு என்று கூறினார்.

இன்று உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தில்தான் பாஜக பெரும்பான்மையான இடங்களை வென்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகத்தான் ராஜபக்சேவை மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளீர்களா? என்பதை பாஜகவினர் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

English summary
Senior Congress leader Peter Alpohonse has questioned the invite of Mahinda Rajapaksa to attend the Narendra Modi's swearing-in ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X