For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸுக்கு 4 லோக்சபா சீட்தான்... அதிர்ச்சி வைத்தியம் தந்த திமுக

லோக்சபா தேர்தலில் திமுகவின் தொகுதி பங்கீட்டு விவரங்களை கேட்ட காங்கிரஸ் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

By Raj
Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸுக்கு 4 லோக்சபா சீட்தான்...வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு 4 லோக்சபா இடங்கள்தான் ஒதுக்கப்படும் என திமுக மூத்த தலைவர் ஒருவர் கறாராக பேசியிருப்பது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேற்றத்தான் இப்படி 2-ம் கட்ட தலைவரை வைத்து திமுக மேலிடம் பேசுகிறது என குமுறுகின்றனர் கதர்சட்டைகள்.

    2014 லோக்சபா தேர்தலின் போதே திமுகவை வேறு கூட்டணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர் வடமாவட்ட திமுக பிரமுகர். திமுகவில் கருணாநிதி, அன்பழகனுக்கு அடுத்து இருக்கக் கூடிய சீனியர் இவர்தான்.

    Cong. shocks over DMKs seat sharing formula

    திமுக மேலிடத்தின் நிழலாக வலம் வரும் இந்த தலைவர்தான் அண்மையில் காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் பேசுகையில், உங்களுக்கு லோக்சபா தேர்தலில் 4 சீட்டுதான்.. இதுவே அதிகம்.. இதை ஏற்றுக் கொண்டால்... இந்த 4 லோக்சபா தொகுதிகளுக்குள் இருக்கும் 'ஜெயிக்கக் கூடிய' சட்டசபை தொகுதிகள் அது 10 அல்லது 15 ஆக கூட இருக்கலாம் அதுவும் உங்களுக்கு என பேசியிருக்கிறார். இதை கேட்ட கதர்த்தலைவர் கொந்தளித்திருக்கிறார்.

    ஆனால் திமுக மூத்த பிரமுகரோ சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி இருக்கிறார். குறிப்பாக தென்மாவட்டங்களில் வேடசந்தூர் போன்ற தொகுதிகளை காங்கிரஸுக்கு கொடுத்ததால் எளிதாக அதிமுக வென்றது; வேடசந்தூர் தொகுதியில் எங்க ஆள் காந்திராஜனை நிறுத்தியிருந்தால் 100% வெற்றி எங்களுக்குத்தான்.. நீங்க இல்லைன்னு சொல்ல முடியுமா? இதுமாதிரி என ஒவ்வொரு தொகுதியாக குறிப்பிட்டு புள்ளி விவரங்களை அடுக்கியுள்ளார். இதை மறுக்க முடியாத நிலையில்தான் கதர் தலைவரும் இருந்திருக்கிறார்.

    இதேகால கட்டத்தில் தம்மை அணுகிய வேறு கூட்டணி பிரமுகர்களிடம், கலைச்சுவிடுங்க.. உங்களுக்கு தேவையான நேரத்தில் ஆதரவாக இருப்போம் எனவும் பேசியிருக்கிறார் அந்த திமுக தலைவர். நாம் சொல்வதை மேலிடம் தட்டாது என்கிற நம்பிக்கையில்தான் தடியை கையில் எடுத்திருக்கிறார் இவர். ஆனால் கொள்கை கோட்பாடு எல்லாவற்றையும் கைவிட்டு தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரன் கதையாகிவிட்டதே என்கிற புலம்பலும் திமுகவில் கேட்காமல் இல்லை.

    English summary
    Sources said that Congress Senior leader shocked over the DMK's Seat Sharing Formula.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X