சட்டசபையில் யாருக்கு ஆதரவு.. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அவசர ஆலோசனை
நாளை கூட உள்ள சிறப்பு சட்டசபையில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று புதிய அரசு பொறுப்பேற்றது. நாளை அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டசபையில் கோருகிறது. இதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.
28 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் பலப்பரிட்சையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எதிர்க் கொள்ளவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா விஜயதாரணி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

கொறடா உத்தரவு மிக முக்கியமானது என்பதால் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்பார்கள். மீறினால் எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும் வாய்ப்பு உண்டு. இந்நிலையில், இன்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மாலையில் நடைபெறும் எம்எல்ஏக்களின் கூட்டத்தில், சட்டசபையில் எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதிமுக பிளவுபட்டிருக்கும் இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒவ்வொரு எம்எல்ஏக்களின் ஆதரவும் அதி முக்கியம். எனவே, இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications