'சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி" தவறான தகவலால் பரபரப்பு!
கோவை: கோவை மாவட்டத்தில் "கீ"டிரா எனப்படும் சாவி குலுக்கி ஆண்களை பெண்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்ற வெளியான தகவல் தவறானது எனத் தெரியவந்துள்ளது.
இந்து மக்கள் கட்சி தமிழக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பொன்.கார்த்திகேயன் தனது முகநூல் பக்கத்தில், "கீ டிரா நடத்தினால், நடத்தப்படும் இடம் தரைமட்டமாக்கப்படும். கோவை செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கால்ப்கிளப்பில் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு சாவிக்குலுக்கல் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வருவோர் காரில்தான் வரவேண்டும், ஜோடியாகத்தான் வரவேண்டும், வருகின்ற அனைவரின் கார் சாவிகள் அனைத்தும் ஒரு குவளையில் போட்டு குலுக்கப்படும்.
அதை அங்கே வந்திருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு சாவியை எடுக்கவேண்டும். எந்தக் கார் சாவி யார் கைக்கு கிடைக்கிறதோ அந்தக்காரின் சொந்தக்காரருடன் அந்தப் பெண் சென்றுவிட வேண்டுமாம். ஒரு மணி நேரம் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து விளக்கு போடப்படும்
அதன்பிறகு அவரவர் ஜோடியுடன் சென்றுவிடலாம், என்னவொரு கலாச்சாரச் சீரழிவு? இதை எப்படி நாம் அனுமதிக்கலாம்? நீங்களே சொல்லுங்க.என்றும் அப்படி நடத்தப்பட்டால் நடத்தப்படும் இடம் தரைமட்டமாக்கப்படும்" என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இன்று தமது முகநூல் பக்கத்தில் இந்தப் பதிவை நீக்கியுள்ள பொன்.கார்த்திகேயன் நமக்கு அனுப்பிய மின் அஞ்சலில், நான் நேற்றைய என்னுடைய பதிவில் கோவை கால்ப் கிளப்பில் புத்தாண்டை முன்னிட்டு மதுவிருந்து மற்றும் கார்சாவிக் குலுக்கல் நிகழ்ச்சி நடப்பதாக பதிவிட்டிருந்தேன் இது பற்றி நாம் விரிவாக விசாரித்தபோது அது உண்மையில்லை என தெரியவந்தது. ஆதாரம் இல்லாத தகவலை பதிவேற்றம் செய்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications