சேலத்தில் 4 மனைவிக்காரர் வெட்டிக் கொலை.. 5வதாக ஒரு பெண்ணை அபகரிக்க முயன்றதால் படுகொலை!
சேலம்: சேலத்தில் ஒரு சமையல் கலைஞரை, சக சமையல் கலைஞர் சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். தனது கள்ளக்காதலியை அபகரிக்க முயன்றதால் இந்தக் கொலையைச் செய்ததாக கைதானவர் கூறியுள்ளார்.
சேலம் தாதக்காப்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (45). இவர் கோபால் என்பவரிடம் சமையல் வேலைக்கு உதவியாளராக சென்று வந்தார். அங்கமுத்துக்கு 4 மனைவிகள். இதில் முதல் மனைவி சீதா, 2வது மனைவி சாந்தி ஆகியோர் இறந்து விட்டனர்.

3வது மனைவி பிரச்சினை காரணமாக பிரிந்து போய் விட்டார். இதையடுத்து காமாட்சி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார் அங்கமுத்து. இந்த நிலையில், கடந்த 31 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறி சென்ற அங்கமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள கோபால் வீட்டின் முன் பகுதியில் உள்ள செப்டிக் டேங்கில் ஒரு பிணம் கிடப்பதாக அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டபோது அது காணாமல் போன அங்கமுத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோபாலை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அங்கமுத்து திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும், இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பிணத்தை வீட்டின் முன்பு உள்ள செப்டிக் டேங்கில் வீசியதாகவும் தெரிவித்தார்.
ஆனால் பிரேதப் பரிசோதனையில் பலமாக தாக்கப்பட்டு அங்கமுத்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து கோபாலைப் போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். இதில் உண்மையைக் கக்கி விட்டார் கோபால்.
இதுதொடர்பாக கோபால் கொடுத்துள்ள வாக்குமூலம்:
எனக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். எனக்கும் எனது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். சில மாதங்களாக நான் தனியாக வசித்து வருகிறேன்.
சம்பவத்தன்று மாலை அங்கமுத்து எனது வீட்டிற்கு வந்தார். அப்போது நான் மணியனூரை சேர்ந்த எனது கள்ளக்காதலி செல்வி (46) என்பவரை எனது வீட்டிற்கு அழைத்தேன். பின்னர் 3 பேரும் வீட்டில் மது குடித்தோம். குடிபோதையில் இருந்த நான் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றேன்.
பின்னர் நான் மீண்டும் வீடு திரும்பினேன் அப்போது அங்கமுத்து செல்வியுடன் உல்லாசம் அனுபவிக்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் அருகில் இருந்த கல் மற்றும் இரும்பு ராடை எடுத்து அங்கமுத்துவை தாக்கினேன். இதில் பலத்த காயம் அடைந்த அங்கமுத்து துடிதுடித்து இறந்தார். வெள்ளிக்கிழமை இரவு இறந்த அங்கமுத்துவின் உடலை நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை வீட்டிற்குள்ளேயே வைத்து இருந்தோம்.
பின்னர் வீட்டிற்கு முன்பு இருந்த செப்டிக் டேங்கை திறந்து அங்கமுத்துவின் உடலை தூக்கி வீசினோம். அதை சரியாக மூடாததால் அங்கமுத்துவை தேடி எங்கள் வீட்டிற்கு வந்த அவரது மனைவி காமாட்சி பார்த்து விட்டு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நாங்கள் சிக்கி கொண்டோம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கமுத்து, அவரது கள்ளக்காதலி செல்வி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications