"கரெக்ட் பண்ணிடுங்க.. இல்லனா தலையணை வச்சி முடிச்சிடுங்க.." - விஜயபாஸ்கர் பேச்சால் அரண்டுபோன பெண்கள்!
திருச்சி: “பக்கத்து வீடு, எதிர்த்த வீடு எல்லாத்துலயும் இருக்கவங்களை கரெக்ட் பண்ணிடுங்க.. இல்லனா, தலையணை வச்சி முடிச்சிடுங்க” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கிராமப்புற மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்க திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான சி. விஜயபாஸ்கர் தலைமையேற்றார்.

அப்போது பேசிய விஜயபாஸ்கர், “இன்று காலையில் எழுந்ததுமே போனில் ஒரு மெசேஜ் வந்திருக்கும். ரூபாய் 5000 வந்துவிட்டது. அது யார் வீட்டுப் பணம்? உங்க பணம். ஆட்சிக்கு வந்ததுமே மாதந்தோறும் ரூபாய் 1000 என சொன்னாங்களா இல்லையா? எத்தனை வருஷம் கழிச்சு பணம் வந்தது? 3 வருடங்கள் கழித்து வந்தது. வட்டியுடன் கணக்கு போட்டால் 50,000.
இன்று 5,000 போட்டார்கள், ஆனால், 50,000 ரூபாய் பாக்கி இருக்கிறது. இன்றும் 5,000 வராத ஆட்களுக்கு இதுவரை 1 லட்சம் தர வேண்டும். திமுக சார்பில் யார் ஓட்டு கேட்டு வந்தாலும், இந்த பணத்தை கேட்டு வாங்குங்க.. 5000 ரூபாயை கொடுத்துவிட்டு, மின்சார கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி எல்லாவற்றையும் உயர்த்தி உள்ளனர்.
நாம தெளிவா இருக்கோம்ல.. என்ன கொடுத்தாலும் வாங்கிக்குவோம். ஓட்டு இரட்டை இலைக்குத்தான். அதிமுக ஆட்சிதான், என்.டி.ஏ கூட்டணிதான். பக்கத்து வீடு, எதிர்த்த வீடு எல்லாத்துலயும் இருக்கவங்களை கரெக்ட் பண்ணிடுங்க.. இல்லனா, தலையணை வச்சி முடிச்சிடுங்க.” எனப் பேசியுள்ளார் விஜயபாஸ்கர்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், அதிமுகவுக்கு வாக்களிக்க வலியுறுத்திப் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “எல்லோரையும் கரெக்ட் பண்ணிடுங்க.. இல்லனா, தலையணை வச்சி முடிச்சிடுங்க.” எனப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயபாஸ்கரின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. முன்னாள் அமைச்சர் மக்களிடம் பேசும்போது இப்படித்தான் பேசுவதா என திமுகவினர் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications