கலாநிதி மாறன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு... நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி : கலாநிதிமாறன் மீதான வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கை, நீதிமன்றம் நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன தலைவராக கலாநிதி மாறன் இருந்தபோது, கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த சுமார் 146.5 கோடி ரூபாயை செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கலாநிதிமாறன், அதன் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டுமென்று டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி, கலாநிதிமாறன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதனையடுத்து கலாநிதிமாறன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுவரை நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என கலாநிதிமாறன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நவம்பர் 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications